ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்டக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் 07.09.2026 இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மலைக்கிராமங்களுக்கு சாலைகள் அமைத்தல் மற்றும் சாலைப் பணிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், தொழிலாளர் நலத்துறை சார்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கிராம ஊராட்சிகளில் மின் கட்டணத் தொகை நிலுவையை செலுத்துதல், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் காலியாக உள்ள பெண் சுகாதாரப் பணியாளர் பணியிடங்களை நிரப்புதல், நடைபாதை அமைத்தல் மற்றும் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு மதில் சுவர் அமைத்தல், மலைக்கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு விற்பனைக் குழுத் துறை சார்பில் நில உரிமை மாற்றம், சுகாதாரத்துறை சார்பில் பிறப்பு, இறப்பு பதிவுகளில் பெற்றோரின் ஆதார் விவரங்களை மென்பொருளில் பதிவு செய்து இணைத்தல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பட்டா பெயர் மாற்றம், முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் நில மாற்றம், வனத்துறை சார்பில் மலைக்கிராமங்களில் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் கோருதல், சீமைக்கருவேலம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றுதல் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றும் அலுவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாதந்தோறும் “மாதம் ஒரு மாமனிதர்” என்ற பெயரில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் 2026-ல் சிறப்பாக பணியாற்றிய கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் (சிறப்பு பராமரிப்பு) ரகுநாதன் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சமூக நீதி மாணவ, மாணவியர் விடுதியில் சிறப்பாக பணியாற்றிய காப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பணியைப் பாராட்டி பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி, ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துசாமி மற்றும் சிந்துஜா உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(2)%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)