சர்வதேச உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நசியனூர் பேரூராட்சி 11வது வார்டில் கவுன்சிலர் ஞானதீபம் தலைமையில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது
March 18, 2022
0
சர்வதேச உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி 11வது வார்டில் கவுன்சிலர் தீபா என்கின்ற ஞானதீபம் தலைமையில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் 11வது வார்டுக்குட்பட்ட மகளிர், குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்த மகளிர்தின விழா கொண்டாட்டத்தில்
பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் 11வது வார்டு கவுன்சிலர் ஞானதீபம் அவர்கள் பேசுகையில்: வாராவாரம் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு 11 வது வார்டில் ஏற்படும் நிறை குறைகளை அறிந்து கொண்டு அதற்கான தீர்வு எடுக்கப்படும் என்றும், குறிப்பாக நமது பகுதி குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி முன்னேற்றமடைய செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிஎஸ்ஐ பள்ளி தலைமையாசிரியை நித்தியகலா அவர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில்
சித்ரா சாம்ராட் நன்றியுரையாற்றினார்.
Tags