ஈரோடு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவினை முன்னிட்டு 22.03.2022 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
March 18, 2022
0
ஈரோடு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவினை
முன்னிட்டு 22.03.2022 அன்று உள்ளூர் விடுமுறை -
மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம்
பெருந்திருவிழாவை முன்னிட்டு 22.03.2022 அன்று ஈரோடு மாவட்டத்தில்
உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி
நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரி /
பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை
அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும்
எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில்
உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு
26.03.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.
உள்ளூர் விடுமுறை நாளான 22.03.2022 அன்று அவசர
அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம்
மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்
என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள்
தெரிவித்துள்ளார்.
Tags