பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை திருவிழாவினை முன்னிட்டு ஈரோடு மண்டல போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள்
March 18, 2022
0
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை திருவிழாவினை
முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஈரோடு
மண்டலம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது எனவும்,
வருகின்ற 21.03.2022, 22.03.2022 மற்றும் 28.03.2022 ஆகிய நாட்களில் திருவிழாவினை முன்னிட்டு
கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி, பவானி,
சத்தியமங்கலம், புளியம்பட்டி, மைசூர் நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப்
பேருந்துகள் இயக்கப்படவுள்ளது எனவும்,
மேற்கண்ட சிறப்பு பேருந்துகள் வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணிஅவர்கள் தெரிவித்துள்ளார்.