பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று 26.03.2022 பெரம்பலூர் சிறுவாச்சூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி கூட்ட அரங்கில் தொடங்கியது
March 27, 2022
0
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய உள்ளாட்சி பிரதிநிதிகள் இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று 26.03.2022 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் பெரம்பலூர் சிறுவாச்சூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி கூட்ட அரங்கில் தொடங்கியது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்கள் தலைமை வகித்தார். மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம் அவர்கள் வரவேற்றார்கள்.
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் அவர்கள் கலந்துகொண்டு பேசியதாவது:
" உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என தெளிவு படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கம். தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுப் பெற்று செயல்படுத்த வேண்டும். அடிப்படை தேவைகளை நிறைவேற்றி பொது மக்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் பாரதி ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள், மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள், மாநில துணைத் தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முதல் நாள் நிகழ்வானது இரவு 8.30 மணி அளவில் முடிவு பெற்றது.