Type Here to Get Search Results !

ஈரோடு செய்தி மக்கள்‌ தொடர்புத்துறையின்‌ சார்பில்‌ “சுதந்திர திருநாள்‌ அமுதப்பெருவிழா” கண்காட்சியினை அமைச்சர்‌ சு. முத்துசாமி ‌ தொடங்கி வைத்தார்‌.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில்‌ (26.03.2022) அன்று ஈரோடு மாவட்டத்தில்‌, 75-வது சுதந்திர தின விழாவினை முனனிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி ‌ தலைமையில்‌, ஈரோடு மாநகராட்சி மேயர்‌ சு.நாகரத்தினம்‌, தலைவர்‌, தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனம்‌ குறிஞ்சி.என்‌.சிவகுமார்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌, வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி அவர்கள்‌ இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத்‌ தலைவர்களை போற்றும்‌ வகையில்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறையின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட “சுதந்திர திருநாள்‌ அமுதப்பெருவிழா” பல்துறை பணிவிளக்க கண்காட்சி மற்றும்‌ அனைத்துத்துறைகளின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட அரசின்‌ திட்டங்கள்‌ குறித்த கருத்துக்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்‌.
இந்நிகழ்ச்சியில்‌, வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி அவர்கள்‌ தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, “சுதந்திர திருநாள்‌ அமுதப்பெருவிழா” (Azadika Amrit Mahotsav)- தேசிய மற்றும்‌ சர்வதேச அளவில்‌ கொண்டாடும்‌ பொருட்டு, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறையின்‌ மூலம்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை கோவிட்‌ - 19 விதிமுறைகளுக்குட்பட்டு நடத்திடவும்‌ இதில்‌ அரசினுடைய அனைத்துறை சார்ந்த அறிவிப்புகள்‌, நலத்திட்டங்கள்‌, வளர்ச்சிப்பணிகள்‌ மற்றும்‌ சாதனைகள்‌ குறித்த விவரங்களுடன்‌ கண்காட்சிகள்‌ நடத்திடவும்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில்‌, 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறையின்‌ சார்பில்‌ “சுதந்திர திருநாள்‌ அமுதப்பெருவிழா” பல்துறை பணிவிளக்க கண்காட்சி (26.03.2022) அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது, இன்றைய தினத்தில்‌ இருந்து 02.04.2022 வரை, மாலை 3.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில்‌, நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில்‌, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத்‌ தலைவர்களை போற்றும்‌ வகையில்‌, ஈரோடு மாவட்டத்தில்‌ உள்ள சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌ குறித்த அறிந்த / அறியப்படாத சுதந்திரப்‌ போராட்ட வீரர்களின்‌ புகைப்படங்கள்‌ மற்றும்‌ வாழ்ந்து வரும்‌ சுதந்திர போராட்ட தியாகிகளின்‌ புகைப்படங்கள்‌ இடம்‌ பெற்றுள்ளது.
மேலும்‌, இக்கண்காட்சியில்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை மற்றும்‌ வேளாண்‌ பொறியியல்‌ துறை, தோட்டக்கலை மற்றும்‌ மலைப்பயிர்கள்‌ துறை, சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்‌ திட்டப்பணிகள்‌, தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு துறை, பால்வளத்துறை (ஆவின்‌ நிறுவனம்‌), கைத்தறி மற்றும்‌ துணிநால்‌ துறை, தமிழ்நாடு கதர்‌ கிராம தொழில்‌ வாரியம்‌, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை (குடும்ப நலம்‌), மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை (சுகாதாரப்பணிகள்‌), வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை (காசநோய்‌) ஆகிய துறைகளின்‌ சார்பில்‌ அரசின்‌ திட்டங்கள்‌ குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும்‌ பள்ளிக்கல்வித்துறையின்‌ சார்பில்‌ இசைப்பள்ளி, பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ கலை நிகழ்ச்சிகள்‌ நடைபெறுகிறது.
இதில்‌ 28.03.2022 அன்று ஈரோடு இரயில்வே காலனி நகரவை நடுநிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாணிக்கம்பாளையம்‌ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆசிரியர்‌ காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 29.03.2022 அன்று திருநகர்காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வைராபாளையம்‌ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஈரோடு அரசு மாதிரி மகளிர்‌ மேல்நிலைப்பள்ளி, இடையன்காட்டு வலசு நகரவை உயர்நிலைப்பள்ளி, 30.03.2022 அன்று கலைமகள்‌ கல்வி நிலையம்‌ மகளிர்‌ மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர்‌ ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளி, காவேரிநகர்‌ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 31.03.2022 அன்று குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியார்‌ வீதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அருள்நெறி திருப்பணி மன்றம்‌ மேல்நிலைப்பள்ளி, விவிசிஆர்‌ செங்குந்தர்‌ மகளிர்‌ மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச்‌ சேர்ந்த மாணவ, மாணவியர்கள்‌ பங்கேற்கும்‌ சுதந்திர போராட்டத்தில்‌ தமிழர்களின்‌ பங்கு குறித்த தலைப்பில்‌ மேற்கண்ட நாட்களில்‌ குழு நடனம்‌, நாடகம்‌ ஆகியவை நடைபெறுகிறது.
மேலும்‌, ஈரோடு கங்கா அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவியர்கள்‌ பங்கேற்கும்‌ பதரநாட்டிய நிகழ்ச்சிகள்‌ நாள்தோறும்‌ நடைபெறும்‌. மேலும்‌, சுற்றுலாத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து மாரத்தான்‌ ஓட்டம்‌, பள்ளி / கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே சுதந்திரப்‌ போராட்ட வரலாறு குறித்த மாவட்ட அளவில்‌ கட்டுரை மற்றும்‌ ஓவியப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளது. இப்போட்டியில்‌ பங்கேற்று வெற்றி பெறும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்கள்‌, இக்கண்காட்சி நிறைவு நாளான 02.04.2022 அன்று வழங்கப்படுகிறது என தெரிவித்தார்‌.
தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின்‌ “மீண்டும்‌ மஞ்சள்‌ பை” திட்டத்தின்‌ கீழ்‌ பொதுமக்களுக்கு நெகிழி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌, பொதுமக்களுக்கு மஞ்சள்‌ பை மற்றும்‌ மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்‌ சார்பில்‌ மரக்கன்றுகளை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்‌. அதனைத்‌ தொடர்ந்து, கலைப்பண்பாட்டுத்துறையின்‌ சார்பில்‌ நடைபெற்ற இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டார்‌. இக்கூட்டத்தில்‌, துணை மேயர்‌ வே.செல்வராஜ்‌, மாவட்ட ஊராட்சி தலைவர்‌ நவமணி கந்தசாமி, கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) / திட்ட இயக்குநர்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வி.மதுபாலன், ஈரோடு வருவாய்‌ கோட்டாட்சியர்‌ பெ.பிரேமலதா, இணை இயக்குநர்‌ (வேளாண்மை) எஸ்‌.சின்னச்சாமி, முதன்மை கல்வி அலுவலர்‌ இராமகிருஷ்ணன்‌, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்‌ தமிழ்செல்வி, துணை இயக்குநர்‌ (நலப்பணிகள்‌) மரு.சோமசுந்தரம்‌, மாவட்ட சுற்றுச்சூழல்‌ பொறியாளர்‌ கோ.உதயகுமார்‌, மாநகர நகர்‌ நல அலுவலர்‌ மரு.பிரகாண்‌, மாவட்ட சமூக நல அலுவலர்‌ பூங்கோதை, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ உதவி இயக்குநர்‌ ம.மகேஸ்வரி, செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ க.செந்தில்குமார்‌, ஈரோடு வட்டாட்சியர்‌ பாலசுப்பிரமணி, உதவி மக்கள்‌ தொடர்பு அலுவலர்கள்‌ சு.பாலாஜி (செய்தி), செ.கலைமாமணி (விளம்பரம்‌) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.