ஈரோடு, அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் அவர்கள் போட்டியின்றி தேர்வு
March 26, 2022
0
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 4ம் தேதி நடந்த மறைமுகத் தேர்தலுக்கு, வார்டு உறுப்பினர்கள் யாரும் வராததால் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் 26.03.2022 இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
3-வது வார்டு உறுப்பினர் கீதா, 15வது வார்டு திமுக உறுப்பினர் பாண்டியம்மாள் உள்ளிட்ட 16 வார்டு உறுப்பினர்கள் இன்று காலை கூட்ட அரங்கிற்கு வந்தனர்.
கீதா சேகருக்கு முன்மொழிய ஆதரவு கிடைக்கவில்லை, அதிமுக கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை இதனால்
திமுகவை சேர்ந்த 15வது வார்டு கவுன்சிலரும், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான பாண்டியம்மாள் அவர்கள் போட்டியின்றி அந்தியூர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் அவர்கள் பாண்டியம்மாளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பாண்டியம்மாள் அவர்களுக்கு பேரூராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற இருந்தது.
கவுன்சிலர்கள் யாரும் வராததால் மறுதேதி அறிவிக்காமல் ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.
இது சம்பந்தமான நோட்டீஸ், அலுவலக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது.
Tags