Type Here to Get Search Results !

கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் இன்று 28-03-2022 அந்தியூர் காவல் நிலையத்தை ஆய்வு

தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் சிறந்த காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்து, தமிழக முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் மூன்று பரிசினை வழங்கி வருகிறது. இவ்வருடம் சிறந்த காவல் நிலையங்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு 20 காவல் நிலையங்களின் பட்டியலில் ஈரோடு மாவட்டம், பவானி காவல் உட்கோட்டம், அந்தியூர் காவல் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அந்தியூர் காவல் நிலையத்தை இன்று 28-03-2022 ந்தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை காவலர்கள் அணுகவேண்டிய முறை பற்றியும், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை கையாளுவது குறித்தும், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அமரும் இருக்கை, குடிநீர் வசதி செய்து கொடுத்தல் பற்றியும், வரவேற்புப்பதிவேடு பராமரித்தல் பற்றியும், போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதையும், காவல் ஆய்வாளர் மற்றும் அனைத்து காவல் ஆளினர்களுக்கு அறிவுறுத்தியும், மிகச் சிறப்பாக காவல்நிலையத்தை பராமரித்து வருவதற்கு பாராட்டுதல்களை தெரிவித்தார். மேலும், காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறியும் ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் மற்றும் பவானி காவல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சி.கார்த்திகேயன் உடன் இருந்தனர்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.