Type Here to Get Search Results !

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு ஈரோட்டில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, நந்தா ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரி மற்றும் வேளாளர் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இணைந்து உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது
இதனை ஈரோடு மேயர். திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் தொடங்கிவைத்தார். இது குறித்து தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜய் குமார் கூறியதாவது... 2013 ஆம் ஆண்டில், உலகளவில் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.3 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2020 ஆம் ஆண்டில் 80.0 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது, 2040 இல் 111.8 மில்லியனாகவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்தநோயால் பாதிக்கப்பட்ட 90% மேற்பட்டோருக்கு, இந்நோய்பற்றி தெரிவதில்லை,ஆரம்ப நிலையில் இந்நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வை பறிபோவதை தடுக்கலாம் இந்தநோயால் 40வயதிற்கு மேற்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் 40வயதிற்கு மேற்பட்டோர் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம், சேலம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் பொதுமக்களின் கண் நலனுக்காக மார்ச் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும்" என்றார். இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவ மருத்துவர்கள் அபிராம சுந்தரி, சக்தி ராஜேஸ்வரி, ரோஹித், மேனேஜர் கிஷோர், மார்க்கெட்டிங் மேனேஜர் கோவிந்தசாமி,பாபு மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஊழியர்கள் நந்தா ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரி, வேளாளர் கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர்கள் மாணவியர்கள் 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.