அமைச்சர் முத்துசாமி அவர்கள் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
March 14, 2022
0
ஈரோடு மாவட்டத்தில் 13.03.2022 நேற்று தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஈரோடு மக்களுக்கு சிறந்த சேவைகளை செய்வதற்கும், தமிழ்நாட்டில் ஈரோடு மாநகராட்சி ஒரு முன்மாதிரியான மாநகராட்சியாக செயல்படவும் அனைவருடைய பங்களிப்பு மற்றும்
செயல்பாடுகள் அனைத்தும் நிறைவாகவும், மிகுந்த கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டியது
அவசியம் எனவும் அனைத்து தரப்பு மக்களையும் நல்ல முறையில் அரவணைத்துக் கொண்டு செல்லவும், பொதுமக்கள் யாரும் தற்போது அமைந்துள்ள ஆட்சியினை குற்றம் குறை கூறாமலிருக்க கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரவர்களுக்குரிய பணியினை சிறப்பாக செய்து முடிக்கவேண்டும் என அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கந்தசாமி, நெசவாளர் அணி செயலாளர்
எஸ். எல். டி. ப. சச்சிதானந்தம், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் மேயர் குமார் முருகேஷ், கருங்கல்பாளையம் பகுதி நிர்வாகி கேபிள் செந்தில்குமார் மற்றும் ஈரோடு மாவட்ட கவுன்சிலர்கள் கீதாஞ்சலி செந்தில்குமார், குறிஞ்சி தண்டபாணி, காட்டு சுப்பு, வக்கீல் ரமேஷ், பழனியப்பா செந்தில் குமார் ஆகியோர் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags