பெரியசேமூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கம்பிவேலி அகற்றப்பட்டது
March 26, 2022
0
ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம், ஈரோடு கிழக்கு உள்வட்டம் பெரியசேமூர் அருகே
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற வேண்டும் என
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்.13223/2021ன் தீர்ப்பில்
உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச். கிருஷ்ணனுண்ணி,
அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம், ஈரோடு கிழக்கு
உள்வட்டம் பெரியசேமூர் ஆ கிராமம் அடுக்குப்பாறை சர்வே எண்-436 ல் அமைந்துள்ள பொதுப்
பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள
வீடுகள் மற்றும் கம்பி வேலி போன்ற ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை உதவி செயற்
பொறியாளரால் காவல்துறை அலுவலர்கள் உதவியோடு ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் நேற்று
(25.03.2022) அகற்றப்பட்டது.
Tags