நந்தா பொறியியல் கல்லூரியில் பயிற்சி கருத்தரங்கம்
March 25, 2022
0
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
மாநில மன்றத்தின் சார்பில் 6 நாட்கள் கொண்ட “தொழில்துறை தேவைகளுக்கான
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு” என்கிற தலைப்பில் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களின்
தனித்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சி கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்த பயிற்சி கருத்தரங்கத்தில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில்
நடைபெற்ற முதல் 3 நாட்கள் கொண்ட பயிற்சிக்கு 5474 இன்னோவேஷன் ஆய்வு
கூடத்தின் வணிக தலைமை பொறுப்பிலுள்ள எஸ். கார்த்திக் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்னர், தொழில் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்குகளை விவரித்து
காட்சி படங்களுடன் உரையாற்றினார். இதில் கணினி மற்றும் மென்பொருள், மின்னியல்,
மின்னணுவியல் போன்ற துறைகளை (Circuit branch) சார்ந்த மாணவர்கள் பங்கு
பெற்றார்கள்.
இரண்டாவது 3 நாட்கள் கொண்ட பயிற்சிக்கு அயாஎலிட்ஸ் நிறுவனத்தின்
தலைமை நிர்வாக அலுவலர் என். சுந்திர மகாலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து
கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். இதில்
இயந்திரவியல், கட்டிடவியல் போன்ற துறைகளை (Non-circuit branch) சார்ந்த
மாணவர்கள் பங்கு பெற்றார்கள்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் என். ரெங்கராஜன் வரவேற்புரை
நிகழ்த்தினார். மேலும் இக்கருத்தரங்கில் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்
எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இறுதி நாளன்று பயிற்சி கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து
கலந்துக் கொண்ட 150 க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை, தகவல்
தொழில்நுட்ப துறையின் தலைவர் முனைவர் சி. சிவா வழங்கி பாராட்டினார்.
இப்பயிற்சி கருத்தரங்கினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பேராசிரியர்கள் மற்றும்
மாணவர்களுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா
கல்வி நீறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, மற்றும் நந்தா தொழிநுட்ப வளாகத்தின்
இயக்குனர் முனைவர் செந்தில் ஜெயவேல் ஆகியோர் தனது வாழ்த்துக்களைத்
தெரிவித்தார்கள்.