கோபி சரக துணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் கூட்டுறவு துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆகியோர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
March 21, 2022
0
கோபி சரக துணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் கூட்டுறவு துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆகியோரை பவானி வட்டாரம், சத்தி வட்டாரம், தாளவாடி வட்டாரம், அந்தியூர் வட்டாரம், அம்மா பேட்டை வட்டாரம், பவானிசாகர் வட்டாரம், நம்பியூர் வட்டாரம், சரக துணைப் பதிவாளர் அலுவலக அணி என வட்டார வாரியாக 9 கிரிகெட் அணிகளாக பிரிக்கப்பட்டு அந்த அணிகளுக்கு இடையான கிரிகெட் போட்டி கவுந்தப்பாடி மாதிரி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்கள் நடந்தது. இந்த போட்டியை கோபி சரக துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தொடங்கி வைத்தார். இதில் அம்மாபேட்டை வட்டாரம் முதல் பரிசையும், நம்பியூர் வட்டாரம் இரண்டாம் பரிசையும், சத்தி வட்டாரம் மூன்றாம் பரிசையும் தட்டி சென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கோபி சரக துணைப் பதிவாளர் ப.கந்தராஜா வழங்கினார். விழாவில் கூட்டுறவு சார்பதிவாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.