மேற்கு மண்டல காவல் துறை தலைவர் தலைமையில், கோவை சரக காவல் துறை துணை தலைவர் முன்னிலையில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது
March 21, 2022
0
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கையாள்வது குறித்து காவல் துறை சார்பில் கருத்தரங்கு கூட்டம் 19.03.2022 அன்று கோவை பி.எஸ்.ஜி ஹைடெக் கல்லூரியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் தலைமையில், கோவை சரக காவல் துறை துணை தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், CWC, அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் குறித்தும், அதை கையாளும் முறை குறித்தும், பாதுகாப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேற்கு மண்டலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் அதிகபடியான தண்டனை பெற்றுத்தந்தமைக்காக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பாராட்டு கேடயமும்,
பவானி மற்றும் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் பொன்னம்மாள் மற்றும் இந்திராணி சோபியா அவர்களுக்கும் மற்றும் நீதிமன்ற பெண் காவல் ஆளிநர்களான தீபா, மணிமேகலை மற்றும் சத்தியபாமா ஆகியோர்களுக்கும்,
காக்கும் கரங்கள் என்ற குழு மூலம் அதிகப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியமைக்காக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கனகேஸ்வரி அவர்களுக்கும்,
மேலும் அதிகப்படியான விபத்து வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்தமைக்காக பவானி உட்கோட்ட காவல் ஆளிநர்களை பாராட்டி பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கினார் என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Tags