Type Here to Get Search Results !

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு வட்டாரம் (கிளை) சார்பாக முப்பெரும் விழா - ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஈரோட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு வட்டாரம் (கிளை) சார்பாக பணி நிறைவு பெற்ற ஆசிரியப் பெருமக்களுக்கு பாராட்டு விழா, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் மகளிர் தின விழா போன்ற அம்சங்களை உள்ளடக்கி முப்பெரும் விழாவாக 22.03.2022 இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இவ்விழா வட்டாரத் தலைவர் ர.தேவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டாரச் செயலாளர் பெ.சே.மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் ப.சிவக்குமார், கல்வி மாவட்ட தலைவர் சே.சுரேஷ், மாவட்ட பிரதிநிதி ஆர்.வளர்மதி, மாவட்ட பிரதிநிதி பெ.மோகன்ராஜ், துணைத் தலைவர் அ.பொன்ராஜ் ஆபிரகாம், துணைச் செயலாளர் என்.டேவிட் லிவிங்ஸ்டன், துணைச் செயலாளர் செ.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த முப்பெரும் விழாவில் மாவட்டச் செயலாளர் இரா.மணி, மாவட்டத் தலைவர் யு.கே.சண்முகம், மாநில துணைத் தலைவர் ஜே.அருள்சுந்தரரூபன், மாநில செயற்குழு உறுப்பினர் சி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் பொதுச் செயலாளர் ச.மயில் மற்றும் STFI பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜான் கிறிஸ்துராஜ் ஆகியோர் விழா பேருரை ஆற்றினர். மேலும் இவ்விழாவில், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களான பச்சபாளி சாணார்பாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சே.சாந்தி மற்றும் மேட்டுநாசுவன் பாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியை இந்திராணி ஆகியோருக்கு பாராட்டு விழா அளித்து கௌரவிக்கப்பட்டது. அதேபோல் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களான தண்ணீர் பந்தல் பாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை பெ.காந்திமதி மற்றும் பி.பெ.அக்ரஹாரம் பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியை சு.வைரமணி ஆகியோருக்கு பாராட்டு விழா அளித்து கௌரவிக்கப்பட்டது.
மேலும் பி.பெ.அக்ரஹாரம் மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் பள்ளிகளில் ஆசிரியர்களால் வாழ்த்துமடல் அளிக்கப்பட்டது. தண்ணீர்பந்தல் பாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யின் இடைநிலை ஆசிரியை பெ.காந்திமதி மற்றும் பி.பெ.அக்ரஹாரம் பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியை சு.வைரமணி ஆகியோர் ஏற்புரை வழங்கினர். இவ்விழா ஒருங்கிணைப்பை சித்தோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ரா.கோபால், மணக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ப.கி.வாசுதேவன், செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் செ.ஜோசப், மணக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் அ.க.சண்முகவடிவு, பி.பெ.அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் அ.பர்வீன், ஜவுளி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சா.சாந்தகுமாரி, பெரிய வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்க நிலைப் பள்ளியின் க.சௌமினி, மாணிக்கம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ர.சித்திரா, தண்ணீர்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கு.ராணி, கொங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஏ.எல்.கவிதா, கொங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பொ.பரிமளாதேவி, ஈபிபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மா.லதா, பெரிய வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்க நிலைப் பள்ளியின் க.சாந்தகுமாரி ராணி ஆகியோர் ஏற்று நடத்தினர். வரவேற்புக் குழுவில் வைராபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பெ.ராதா ருக்மணி, காவேரிக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் இடைநிலை ஆசிரியை சு.கமலவேணி, சொக்காய் தோட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் இடைநிலை ஆசிரியை மோ.கலைவாணி ஆகியோர் இடம் பெற்றனர். இறுதியாக வட்டார பொருளாளர் K.S.ஜெயநிர்மலாம்பிகை அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.