உலக தண்ணீர் தினம் - அந்தியூர் வட்டார கீழ்வாணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
March 22, 2022
0
ஈரோடு மாவட்டத்தில் இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்வாணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் கீழ்வாணி ஊராட்சியில் உள்ள மொத்தம் 649 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் வினியோகம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நடராஜன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மகளிர் திட்ட இயக்குநர் / துணை இயக்குநர் கெட்சிலிமா அமாலினி , அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.