உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு
March 23, 2022
0
ஈரோட்டில் 23.3.2022 இன்று உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு ஈரோடு அரசு மருத்துவமனை அருகில், ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, சொசைட்டி ஃபார் நியூரோ கிரிட்டிக்கல் கேர் மற்றும் தி இந்தியன் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசன் ஆகியோர் இணைந்து மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில்
விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நடைபெற்றது.
மேலும் தலைக்காயம் சம்பந்தமாக அறிவிக்கப்பட்டிருந்த குறும்பட போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் பங்கேற்றுள்ளனர். இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மணியன் மெடிக்கல் சென்டர் இயக்குனர்
டாக்டர். செந்தில் குமரன், வெள்ளகோவில் கலைஞர் இளைஞர் பாசறை சேர்ந்த நண்பர்கள்
ரத்ததானகுழு, குளோபல் இன்ஸ்டியூசன் , அன்பு செவிலியர் கல்லுாரி, பல சமுக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணியன் மெடிக்கல் சென்டர் மக்கள் தொடர்பு அலுவலர் (PRO) ராம்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
பின்னர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர் வரை ஊர்வலம் நடைபெற்றது.