ஈரோடு மாவட்டத்தில் 54406 பயனாளிகளுக்கு ரூ.259.19 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி - ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் அறிவிப்பு.
March 23, 2022
0
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர
வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு
கடன்சங்கம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்,
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும்
மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் மொத்த
எடை 40 கிராமிற்கு உட்பட்டு நகைகளை அடமானம் வைத்து பெற்ற பொது
நகைக்கடன்களை அரசாணை (நிலை) எண்.97 கூட்டுறவு, உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் (சிசி.1)) துறைநாள்: 01.11.2021இல் வகுக்கப்பட்ட
நெறிமுறைகளுக்குட்பட்டு அனைத்து தகுதிகளையும் நிறைவுசெய்தும்,
நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுத் தணிக்கைத்துறையினரின்
ஆய்வுக்குட்படுத்தியும் இறுதியாக்கம் செய்யப்பட்ட தள்ளுபடிக்கு தகுதிபெற்ற
54406 பயனாளிகளுக்கு ரூ.259.19 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதிபெற்ற பயனாளிகள் தாங்கள்
நகைக்கடன் பெற்ற சங்கங்களை நேரில் அணுகி நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்
மற்றும் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என
ஈரோடு மண்டல கூட்டுறவுச்
சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.