ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர்சேகரிப்பு கட்டமைப்புகள், தடுப்பணைகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றின் விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில், “ஈரம் ஈரோடு” என்ற புதிய இணையதளத்தை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தொடங்கி வைத்தார்.
March 22, 2022
0
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி
அவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், “ஈரம் ஈரோடு” என்ற
புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (22.03.2022) மாவட்ட
ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள், மாவட்ட
நிர்வாகத்தின் சார்பில் “ஈரம் ஈரோடு” என்ற புதிய இணையதளத்தினை
தொடங்கி வைத்தார்.
“ஈரம் ஈரோடு” என்ற இணையதளமானது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள
அணைகள், நீர்சேகரிப்பு கட்டமைப்புகள், தடுப்பணைகள் மற்றும் நீர்நிலைகள்
ஆகியவற்றின் விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தன்னார்வ. தொண்டு
நிறுவனங்கள் மூலம் குளங்கள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்ற பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நடைபெற்று வரும் பணிகளான
தடுப்பணைகளின் கட்டுமான பணிகள், கீழ்பவானி அமைப்பை
நவீனப்படுத்துதல், அத்திக்கடவு அவிநாசி திட்டம், பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு
மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், மொடக்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டம்
ஆகியவற்றை பொதுமக்கள் http://eeramerode.in என்ற இணைப்பில்
தாங்களே அறிந்து கொள்ளலாம்.
“ஈரம் ஈரோடு” என்ற இந்த இணையதளமானது, ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும்
தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் ஈரோடு மாநகராட்சி
ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு
நிறுவனங்களின் பங்களிப்பினை உள்ளடக்கி இந்த இணையதளம்
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர், மாவட்ட
ஊரக வளர்ச்சி முகமை லி.மதுபாலன் உட்பட தொடர்புடைய துறை
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.