ஈரோடு JCI சார்பாக காசநோய் விழிப்புணர்வு பேரணி - ஈரோடு மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
March 24, 2022
0
உலக காசநோய் தினத்தை (24.03.2022) முன்னிட்டு
Erode JCI சார்பாக காசநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Erode JCI தலைவர் பிரேம்சரண் மதிவாணன் மற்றும் துணைத் தலைவர் S.V.அபிஷேக் தலைமையில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த காசநோய் விழிப்புணர்வு பேரணியை ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும் துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சசிமோகன், JCI துணைத் தலைவர் K.கவின் குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் R.சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் ஆர் டி நேஷனல் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியிலிருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானம் வரை நடைபெற்றது.