நந்தா கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சு. முத்துசாமி இன்று தொடங்கி வைத்தார்.
March 26, 2022
0
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (26.03.2022) இன்று, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்து, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி காண பதிவு செய்தல் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு செய்தல் மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகளில் வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல் ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்குபெற்று 5000 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர்
ஹெச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு
மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், தமிழ்நாடு
அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி.என்.சிவகுமார்,
துணை மேயர் வே.செல்வராஜ், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன், செயலாளர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி ஆகியோர் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.