Type Here to Get Search Results !

விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக தர்ம ரக் ஷா விழா ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோட்டில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக தர்மரக் ஷா விழா 27.03.2022 அன்று நடைபெற்றது.
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பானது 1964 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று தொடங்கப்பட்டு உலகம் முழுவதிலும் உள்ள இந்து மத ஒற்றுமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பல்வேறு சேவை பணிகளை ஆற்றி வருகிறது. இந்த சேவையின் பணிகளை நல்ல உள்ளம் கொண்ட இந்து மக்களிடம் இருந்து நன்கொடையாக தர்ம காரியங்களுக்காக காணிக்கை பெரும் விதமாக, ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள கல்யாண விநாயகர் கோவில் எதிரில் தனியார் மஹாலில் தர்மரக் ஷா நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வி.ஹெச்.பி. மாநகர தலைவர் G.கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். விசுவ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் சு.சீனிவாசன் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்
அதில் அவர் கூறுகையில் இந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்து சமயத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அனைவரும் தர்ம காரியங்களில் அதிகம் ஈடுபட்டு நம்மால் முடிந்தவரை நன்மைகள் செய்ய வேண்டும் என்றும், நமது குழந்தைகளுக்கும் தர்ம காரியங்கள் செய்வதை கற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் கூறினார். தர்மரக் ஷா விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ கௌரா பவுண்டேஷனின் நிறுவனர் M.நிவேதா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதில் பகவத் கீதையின் முக்கிய கருத்துக்களை தெளிவாக விவரித்தார் மேலும் மனிதனின் சுக துக்கங்களுக்கு காரணம் நமது மனது தான் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். இவர் பேசுகையில் தினமும் தியானம் செய்தல் மற்றும் இறை வழிபாடு குறித்த பல நல்ல கருத்துக்களை அனைவருக்கும் புரியும் விதமாக தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்.
வி.ஹெச்.பி. மாவட்ட தலைவர் V.S.இளங்கோ, முன்னிலை வகித்தார். ஜேத்தியா குரூப் இயக்குநர் பிரதீப் ஜெயின், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை செயலாளர் S.சாய்சிவா, கிராம கோ பூசாரிகள் பேரவை செயலாளர் S.A.சண்முகம், வி.ஹெச்.பி. மாத்ரு சக்தி கோட்ட பொறுப்பாளர்கள் A.K.தங்கமணி, வி.ஹெச்.பி. துர்காவாகினி கோட்ட பொறுப்பாளர் A.S.ஸ்ரீ, மாவட்ட துணைத்தலைவர் G.P.தர்மராஜ், மாவட்ட செயலாளர் K.S.இளங்கோ, மாவட்ட இணை செயலாளர் K.A.சிவசக்தி, மாவட்ட பஜ்ரங்தள் S.P.முருகேசன், மாவட்ட துர்காவாகினி S.சௌபர்ணிகா,
மாநில மந்திர் பிரமுக். S.ஸ்ரீதர், மாநில தர்மபிராத் பிரமுகர் முத்து, மாநில துணைத் தலைவர் D.உமாசிவம், மாவட்ட பொறுப்பாளர் P.வேலாயுதம், மாநில இணைச் செயலாளர் P.சுப்பிரமணி, மாவட்ட மாத்ருசக்தி E.T. சுமதி, மாவட்ட சத்சங்கம் K.P.ராமசாமி, மாநில சேவா பிரமுகர். K.வடிவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர். வி.ஹெச்.பி. மாநகர சத்சங் பொறுப்பாளர் எஸ்.கவிதா, நன்றி உரையாற்றினார்.

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.