மாநில அளவிலான எறிபந்து போட்டியில் ஈரோடு நந்தா சென்டரல் பள்ளி சாதனை
March 24, 2022
1
மாணவிகளுக்கான 14 வயதிற்குட்பட்ட மாநில அளவிலான எறிப்பந்து போட்டி
திருப்பூரில் அண்மையில் நடைபெற்றது. செங்ப்பள்ளி ஸ்ரீ குமரன் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற இப்போட்டியில் சுமார் 20 பள்ளிகளை சார்ந்த
மாணவிகள் 20 அணிகளாக களம் இறங்கினார்கள்.
இவர்களுடன் கூரப்பாளையம் பிரிவில் இயங்கிவரும் நந்தா சென்டரல் மெயின்
பள்ளியினை சார்ந்த மாணவிகள் போட்டிகளை எதிர்க்கொண்டார்கள். பல்வேறு சுற்றுகளை
கடந்து இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றார்கள். இறுதிப் போட்டியின் முடிவில் இரண்டாம்
இடத்தினை தக்க வைத்து ஈரோடு நந்தா சென்டரல் பள்ளி பெருமை சோரத்தார்கள்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு திருப்பூர் மாவட்ட மேயர் தினேஷ்குமார் சிறப்பு
விருந்தினராக கலந்துக் கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இரண்டாம் இடத்தினை தக்க வைத்து பள்ளிக்கு பெருமை சோத்த மாணவிகளுக்கு
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் சிறப்பு பரிசுகளை
வழங்கி பாராட்டினார்.
மேலும் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப்,
நந்தா கல்வி கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி, நந்தா கல்வி
நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி முனைவர். ஆறுமுகம், முதலவர்
ராஜேஷ், நிர்வாக அதிகாரி மனோகரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்
செந்தில் குமார், பிரபு செந்தில் ஆகியோர் மாணவிகளை பாராட்டினார்கள்.
வெற்றி பெற்ற மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete