ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம் - அலகு I, II மற்றும் III
March 31, 2022
0
பாரதியார் பல்கலைக்கழம், ஸ்ரீ வாசலி கல்லூரி, ஈரோடு நாட்டு நலப்பணித்திட்டத்தின் 7
நாள் சிறப்பு முகாம் 25.03.2022 முதல் 31.03.2022 வரை ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் சமுதாயக்கூடம், மணக்காட்டூர் , மேட்டுநாசுவன் பாளையம் மற்றும் பழையூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெற்றது.
முகாமின் துவக்க விழா 25.03.2022 அன்று ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் சமுதாயக் கூடம்,
மற்றும் மணக்காட்டூரில் நடைபெற்றது.
முகாமில் பள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டுப்
போட்டிகள், மகளிர் மேம்பாட்டுத் திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
முகாமின் இரண்டாம் நாள் மணக்காட்டூர் இல் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முகாமின் சிறப்பாக நான்காவது நாள் மற்றும் ஆறாம் நாள் கிராம மக்களுக்கு இலவச
பொது மருத்துவ முகாம் care 24 hospital, erode உடன் இணைத்து நடத்தப்பட்டது. இம்முகாமில்
110 பொதுமக்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.
The Eye Foundation உடன் இணைந்து நடைபெற்ற இலவச கண் பரிசோதனை
முகாமில் 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு பயன்பெற்றனர்.
முகாமின் ஜந்தாம் நாள் மாணவ மாணவியர்களுக்கு சமூக நலத்துறையில் ஈரோட்டில் இருந்து வருகை புரிந்த தா. சுபாஷினி Centre Administrator, One Stop Center, Social Welfare Department, Erode அவர்கள் மகளிர் மேம்பாடு குறித்து மற்றும் மேம்பாட்டு திட்டம் பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் லட்சுமி நகர் ரவுண்டானாவில் உள்ள பூங்காவினை தூய்மைப்படுத்தி கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அங்குள்ள நெகிழிகள் அனைத்தும் நீக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
முகாமில் மணக்காட்டூர், பழையூர் மற்றும் மேட்டுநாசுவம்பாளையத்தில் உள்ள
சமுதாயக்கூடம், பொது நூலகம், மாரியம்மன் கோவில், ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி மற்றும்
அஞ்சல் அலுவலகம், அங்கன்வாடி ஆகிய இடங்கள் தூய்மை செய்யப்பட்டு வெள்ளை அடித்துக்கொடுக்கப்பட்டது.
ஸ்ரீ நீலகண்ட நாயனார் சமுதாய கூடத்தை சுற்றியுள்ள தெருக்கள் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.
முகாமில் ஒவ்வொரு நாளும் " தூய்மை பாரதம்", " மின்சார சிக்கனம்", " கொரனா
வைஸ்", "புற்றுநோய் விழிப்புணர்வு", "கண்தானம்" மற்றும் ” நெகிழியை தவிர்ப்போம்” ஆகிய
பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. இப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு மாணவ,
மாணவியர்களின் மூலமாக வீடுதோறும் வழங்கப்பட்டது.
முகாமில் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் மாணவ, மாணவியர்களின் சார்பாக பிரசுரம்
சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு போணி நடைபெற்றது. முகாமில் கலந்துக் கொண்ட 150 மாணவ,
மாணவியர்களுக்கு மாலை வேளையில் தனிமனித திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்
துறைசார் வல்லுநர் குழுமத்தால் பயிற்றுவிக்கப்பட்டது.
முகாமிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி மன்ற
தலைவர் S..மகேஸ்வான், B.A., D.C.E., .அவர்கள் முன் நின்று செய்து கொடுத்தார்.
இம்முகாமினை ஸ்ரீ வாசவி கல்லூரி முதல்வர் முனைவர்.N.ஜெயகுமார் அவர்கள்
தலைமையேற்று நடத்திக் கொடுத்தார்.
இம்முகாமிற்கான அனைத்து எற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட
ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் A.ராஜராஜேஸ்வரி, முனைவர் G. கலைமணி, முனைவர்
P. அசோக்குமார் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களால் சிறப்பாக ஏற்பாடு
செய்யப்பட்டது. முகாமிற்கு உதவியாக வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் R. சந்தனம் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
இம்முகாமில் சேவை புரியும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதுலுதவி
மருத்துவ உபகரணங்கள், சேவா பன்னாட்டு அமைப்பின் சார்பாக இலவசமாக இம்முகாமிற்கு
வழங்கப்பட்டது.
இம்முகாமில் பாரதியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் திரு. P. அண்ணாதுரை
அவர்கள் கலந்து கொண்டு, இலவச கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்து, மாணவ
மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
Tags