செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மினிமாரத்தான் - கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
April 01, 2022
0
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் இன்று
(01.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி
அவர்கள் 75-வது சுதந்திர தின விழா - “சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை
முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,
மாணவியர்கள் பங்கேற்ற மினிமாரத்தான் ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி
வைத்தார்.
இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும்
வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “சுதந்திர திருநாள்
அமுதப்பெருவிழா” பல்துறை பணிவிளக்க கண்காட்சி மற்றும்
அனைத்துத்துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்த கருத்துக்காட்சி
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் கடந்த
26.03.2022 முதல் நடைபெற்று வருகிறது.
மேலும் இக்கண்காட்சியில் நாள்தோறும்,
மாலை 3 மணி முதல் 10 மணி வரை பள்ளிக்கல்வித்துறை மற்றும் இசைப்பள்ளி
மாணவ, மாணவியர்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட விழிப்புணர்வு கலை
நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள்
பார்வையிட்டு பயனடைந்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று (01.04.2022) “நெகிழியில்லா ஈரோடு”
விழிப்புணர்வு மினிமாரத்தான் ஓட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,
மாணவியர்கள் பங்கேற்றனர்.
இந்த மினிமாரத்தான் ஓட்டமானது, வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில்
துவங்கி ஈரோடு மாநகரத்தின் முக்கிய சாலை வழியாக சென்று வ.உ.சி
மைதானத்தை வந்தடைந்தது. இதில் மாணவ மாணவியர்கள் மற்றும் கல்லூரி
மாணவ மாணவியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார்,
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் கோ.உதயகுமார், ரகுபதி, மாவட்ட
விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்த குமார் உட்பட சுற்றுச்சூழல்
உதவிப்பொறியாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர்
கலந்துக்கொண்டனர்.