ஈரோடு, தொழிற்பயிற்சி நிலையத்தில் ( ITI ) குறுகிய கால பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2022 -
March 22, 2022
0
தமிழ்நாடு அரசின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில்
தொழிற்பயிற்சி நிலையங்களில் ( ITI ) குறுகிய கால பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால
பயிற்சித்திட்டத்தின் கீழ் எலக்ட்ரீசியன் (Electrician Domestic Solutions ) மற்றும் டெக்ஸ்டைல்
(Dyestuff & Chemical Preparation Operator ) ஆகிய குறுகிய கால ( மூன்று மாதங்கள்)
தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தோச்சி, 10-ம் வகுப்பு Pass / Fail
மற்றும் 12-ம் வகுப்பு Pass / Fail பெற்றவர்கள் காசிபாளையம் அரசு தொழிற்பயிற்சி
நிலையத்தை அணுகலாம்.
நேரடி சேர்க்கை என்பதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், உதவித் தொகை
கொடுக்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ்
வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு
தொலைபேசி எண். 0424-2275244.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
· 8-ஆம் வகுப்புஃ 10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
· மாற்று சான்றிதழ்,
சாதி சான்றிதழ்,
ஆதார்அட்டை,
· Passport Size Photo-4,
மேற்காணும் ஆவணங்களை நேரில் எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.03.2022.