செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட "சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா” நிறைவு நாள் விழா (02.04.2022) மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
April 03, 2022
0
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில்
(02.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி
அவர்கள், 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, இந்திய விடுதலைக்காக
பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில், செய்தி மக்கள்
தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட "சுதந்திர திருநாள்
அழமுதப்பெருவிழா” பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் நிறைவுநாள் விழாவில்,
சிறந்த கண்காட்சிஅரங்குகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி
மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்
ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தெரிவித்ததாவது,
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் 75-வது
சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத்
தலைவர்களை போற்றும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்
அமைக்கப்பட்ட “சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா” பல்துறை பணிவிளக்க
கண்காட்சி மற்றும் அனைத்துத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின்
திட்டங்கள் குறித்த கருத்துக்காட்சியினை 26.03.2022 அன்று மாண்புமிகு
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி
அவர்கள் தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியானது, 26.03.2022 முதல் இன்று வரை தொடர்ந்து
நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில், இந்திய விடுதலைக்காக பாடுபட்ட
சுதந்திரப் போராட்டவீரர்கள் குறித்த அறிந்த /அறியப்படாத சுதந்திரப் போராட்ட
வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட
தியாகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் இக்கண்காட்சியில்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை,
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூகநலன் மற்றும் மகளிர்
உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், தமிழ்நாடு
மகளிர் மேம்பாட்டு துறை, பால்வளத்துறை (ஆவின் நிறுவனம்), கைத்தறி மற்றும்
துணிநூால் துறை, தமிழ்நாடு கதர் கிராமதொழில் வாரியம், மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை (குடும்பநலம்), மருத்துவம்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை (சுகாதாரப்பணிகள்), வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை (காசநோய்)
ஆகியதுறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து கண்காட்சி
அமைக்கப்பட்டது.
மேலும், கலைப் பண்பாட்டுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில்
இசைப்பள்ளி, பள்ளிமாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி
மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற “நெகிழியில்லா ஈரோடு” விழிப்புணர்வு
மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ,
மாணவியர்களிடையே, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு குறித்து மாவட்ட
அளவில் பாடல், நடனம், கவிதை எழுதுதல், உரை, நாடகம், வில்லுப்பாட்டு,
கவிதை வாசித்தல், தனி நடனம், சிலம்பாட்டம், மாறுவேடம், தமிழ் பேச்சு,
ஆங்கிலம் பேச்சு, குழு நடனம், யோகாசனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் “மீண்டும் மஞ்சள் பை”
திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு நெகிழி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
சார்பில் மரக்கன்றுகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது எனத்
தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நிறைவு நாளான (02.04.2022) மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் பல்துறை பணிவிளக்க கண்காட்சியில் சிறந்த
முறையில் அமைக்கப்பட்ட அரங்குகளில் முதல் அரங்கமாக மாவட்ட
ஊரகவளர்ச்சி முகமைக்கும், இரண்டாவது அரங்கமாக ஒருங்கிணைந்த
குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கும் மற்றும் மூன்றாவது அரங்கமாக மருத்துவம்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் (சுகாதாரப்பணிகள்) பாராட்டுச்
சான்றிதழ்களையும், தொடர்ந்து “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில்
செய்திமக்கள் தொடர்புத் துறையின் அலங்கார ஊர்தி நிகழ்ச்சியில்
கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற 3 நபர்களுக்கும், 75-வது சுதந்திர தினவிழா
“சுதந்திரதிருநாள் அமுதப் பெருவிழா” பல்துறை
பணிவிளக்கக் கண்காட்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற 19
நபர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறையில் பள்ளிமாணவ, மாணவியர்களிடையே
நடத்தப்பட்ட நடனம், பாடல், குழு நடனம், யோகாசனம் கவிதைவாசித்தல்,
சிலம்பாட்டம், மாறுவேடம், தமிழ்பேச்சு, ஆங்கிலம் பேச்சு உள்ளிட்ட பல்வேறு
போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 258 மாணவ, மாணவியர்களுக்கும்
என மொத்தம் 500 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) எஸ்.சின்ன ச்சாமி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு
அலுவலர் (விளம்பரம்) செ.கலைமாமணி உட்பட தொடர்புடையதுறை
அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.