Type Here to Get Search Results !

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - ஈரோடு மாவட்டம்‌, புதிய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்‌ தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி தகவல்‌.

ஈரோடு மாவட்டம்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌ அந்தியூர்‌, அம்மாபேட்டை, நம்பியூர்‌, சத்தியமங்கலம்‌, தாளவாடி, தூ.நா.பாளையம்‌ ஆகிய 6 ஒன்றியங்களில்‌ பள்ளி செல்லா மற்றும்‌ இடைநின்ற பெண்‌ குழந்தைகள்‌ தங்கி கல்வி பயின்றிட கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பெண்கள்‌ உண்டு உறைவிடப்‌ பள்ளிகள்‌ செயல்பட்டு வருகின்றன. இதில்‌ அந்தியூர் ‌ஒன்றியம்‌, பள்ளிபாளையத்தில்‌ KGBV யில்‌ செயல்பட்டு வரும்‌ கேஜிபிவி பள்ளிக்கு புதிய அரசு சாரா தொண்டு நிறுவனம்‌ தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. இப்பள்ளியை நடத்திட விருப்பமுடைய அரசு சாரா தொண்டு நிறுவனங்களின்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌. விண்ணப்பங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌ : 14.04.2022 விண்ணப்பம்‌ பெற வேண்டிய முகவரி: கூடுதல்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாவட்டத்‌ திட்ட அலுவலகம்‌ அரசு பெண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளி வளாகம்‌, ஈரோடு தொடர்புக்கு 0424-2265556, 9788856246

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.