தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய , ஈரோடு மற்றும் பெருந்துறை அலுவலகங்களில் 05.04.2022 நேற்று நேரடி கலந்தாய்வு அமர்வு நடைபெற்றது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (ஈரோடு மற்றும் பெருந்துறை) தகவல்.
April 06, 2022
0
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகங்களில் நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டம்
தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல் மற்றும் அவற்றை கண்காணித்தல் மற்றும்
மாசு தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை
அலுவலகத்தின் உத்தரவின்படி நேரடி கலந்தாய்வு அமர்வு 05.04.2022 நேற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஈரோடு மற்றும் பெருந்துறை அலுவலகங்களில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு அமர்வில் கலந்து கொள்வதற்கு 25 நபர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்திருந்தனர். அதில் 4 நபர்கள் மேற்படி அமர்வில் கலந்து கொள்ளவில்லை. 2 புகார் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு
காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் விபரங்கள்
மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் தெரிவிக்கப்படும் என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஈரோடு மற்றும் பெருந்துறை அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகங்களில் நேரடி கலந்தாய்வு அமர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.