Type Here to Get Search Results !

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கோபிசெட்டிபாளையம்‌ பகுதிகளில்‌ நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌.

ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ வட்டம்‌, குண்டேரிப்பள்ளம்‌ அணை சுற்றுலா தளத்தில்‌ நேற்று (05.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ ரூ.1.86 கோடி மதிப்பீட்டில்‌ சுற்றுலா பயணிகளின்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்‌ மற்றும்‌ அணுகுசாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதை நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌.
ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ வட்டம்‌, குண்டேரிப்பள்ளம்‌ அணையில்‌ சுற்றுலா பயணிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, ரூ.1.86 கோடி மதிப்பீட்டில்‌ சுற்றுலா பயணிகளின்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்‌ மற்றும்‌ அணுகுசாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதில்‌ ரூ.25.22 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுற்றுலா பயணிகளுக்கான ஒய்வு அறைகள்‌, ரூ.26.64 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கழிப்பறை, அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ குடிநீர்‌ வசதிகள்‌ ஏற்படுத்துதல்‌, ரூ.78.31 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வாகனம்‌ நிறுத்துமிடத்தில்‌ பாதுகாப்பு அரண்‌ அமைத்தல்‌ மற்றும்‌ ரூ.56.23 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அணுகுசாலை அமைத்தல்‌ போன்ற பணிகள்‌ முடிவுற்று, பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு வழங்க தயார்‌ நிலையில்‌ உள்ளது.
அதனைத்‌ தொடர்ந்து, இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. மேலும்‌, குண்டேரிப்பள்ளம்‌ அணையில்‌ பூங்கா அமைத்து பராமரித்திடவும்‌ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌. மேலும்‌, குண்டேரிப்பள்ளம்‌ அணையினையும்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அணையின்‌ நீர்‌ கொள்ளளவு, நீர்‌ இருப்பு மற்றும்‌ நீர்‌ வெளியேற்றம்‌ குறித்து அலுவலர்களிடம்‌ கேட்டறிந்தார்‌.
முன்னதாக, கோபிசெட்டிபாளையம்‌ பகுதியில்‌ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌ சார்பில்‌ மாணவ, மாணவியர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ கையுந்து பந்து, கபாடி, டேபிள்‌ டென்னிஸ்‌, சதுரங்கம்‌, கேரம்‌ மற்றும்‌ யோகா போன்ற விளையாட்டுகள்‌ விளையாடுவதற்காக செயல்படும்‌ கையுந்து பந்து உள்‌ விளையாட்டு அரங்கம்‌ மற்றும்‌ கபடி ஆடுகளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.
தொடர்ந்து, டி.என்‌.பாளையம்‌ ஊராட்சி ஒன்றியம்‌, கொண்டையம்பாளையம்‌ ஊராட்சி பகுதியில்‌ செயல்படும்‌ அரசு நோடி நெல்கொள்முதல்‌ நிலையத்தினையும்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடமிருந்து பெறப்படும்‌ நெல்‌ மூட்டைகளை பாதுகாப்பான முறையில்‌ சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌. இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்‌ திருமூர்த்தி, உதவிப்பொறியாளர்‌ கல்பனா, கோபிசெட்டிபாளையம்‌ வட்டாட்சியர்‌ தியாகராஜன்‌ உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.