Type Here to Get Search Results !

மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ ச.சந்தோஷினி சந்திரா அவர்கள் இன்று ரூ.11,05,920/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக திருமதி. ச. சந்தோஷினி சந்திரா அவர்கள் இன்று 04.04.2022 பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி. ச.சந்தோஷினி சந்திரா அவர்கள்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ முதியோர்‌ உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால்‌ கைவிடப்பட்டோர்‌ உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்‌ துறை நடவடிக்கை, கல்விக்கடன்‌, தொழில்‌ கடன்‌, குடிநீர்‌ வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள்‌ மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்து மொத்தம்‌ 254 மனுக்கள்‌ வரப்பெற்றன. பொதுமக்கள்‌ அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ அவர்கள்‌ பெற்று உரிய துறை அலுவலர்களிடம்‌ வழங்கி அவற்றின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்‌. மேலும்‌, மாண்புமிகு முதலமைச்சர்‌ தனிப்பிரிவு மனுக்கள்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்களின்‌ முகாம்‌ மனுக்கள்‌, மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பெறப்பட்ட மனுக்கள்‌ மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்டார்‌.
இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ச.சந்தோஷினி சந்திரா அவர்கள்‌, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்‌ கோர்வையாக பேசும்‌ வகையில்‌ ஐஐடி மாணவர்களால்‌ உருவாக்கப்பட்ட ஆவாஸ்‌ தொழில்‌ நுட்பம்‌ மென்பொருள்‌ அடங்கிய தலா ரூ.24,240,- மதிப்பிலான டேப்‌ (188) ஒரு பள்ளிக்கு 2 வீதம்‌ 8 சிறப்பு பள்ளிகளுக்கு ரூ.3,87,840,/ மதிப்பிலான டேப்‌ மற்றும்‌ 68 பார்வையற்றோர்‌ மற்றும்‌ காதுகேளாதவர்களுக்கு தலா ரூ.10,560,- வீதம்‌ ரூ.7,18,080,/- மதிப்பிலான கைபேசிகளையும்‌ என மொத்தம்‌ ரூ. 11,05,920,- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.
இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியரின்‌ கூடுதல்‌ நேர்முக உதவியாளர்‌ (நிலம்‌) பி.ராஜ்குமார்‌, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ இலாஹிஜான்‌, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌ ரங்கநாதன்‌, மாவட்ட மாற்றுத்திறரனாளிகள்‌ நல அலுவலர்‌ கோதைசெல்வி உட்பட அனைத்து துறை அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.