மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்குதல் விழா மற்றும் மஞ்சள் நீர் தெளித்தல் விழா புகைப்படங்கள்... (PHOTO GALLERY)
April 04, 2022
0
02.04.2022 ஈரோடு மாவட்டத்தில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் காரைக்கால் மாரியம்மன் கோவில்களில் கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீர் தெளித்தல் விழா கடந்த சனிக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டு சென்றடைந்தது அதே நேரத்தில் சின்ன மாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்களும் பிடுங்கப்பட்டு ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வந்தடைந்தது. அங்கிருந்து மூன்று கம்பங்களும் புறப்பட்டு ஈரோட்டில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று அக்ரஹார வீதி வழியாக காரைவாய்க்கால் சென்றடைந்தது. காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் உள்ள வாய்க்காலில் கம்பம் விடப்பட்டது.
மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்குதல் விழா மற்றும் மஞ்சள் நீர் தெளித்தல் விழா புகைப்படங்கள் (PHOTO GALLERY)