நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா
April 14, 2022
0
ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டு விழாவானது கல்லூரி வேலைவாய்ப்பு அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். மேலும் விழாவில் ஈரோடு நகர காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் எஸ். ஆனந்தகுமார் மற்றும் விளையாட்டு துறையின் பயிற்சியாளர் ஏ.எம். திருமாவளவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி முனைவர். எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். முன்னதாக கல்லூரியின் முதல்வர் எம். மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். பின்னர், கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் அவர்கள் விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள். ஆசிரிய, ஆசிரியைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்காக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் தனி நபர் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை இரண்டாம் ஆண்டு பெட்ரோகெமிக்கல் துறையைச் சார்ந்த எஸ். மனோஜ்குமார் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறையைச் சார்ந்த வி.கே. ஸ்ரீதேவி என்பவரும் பெற்றார்கள். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் மின்னியல் மற்றும் மின்னணு துறையும், பெண்கள் பிரிவில் கணினி அறிவியல் துறையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஆசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, மற்றும் தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குனர் முனைவர் செந்தில் ஜெயவேல் ஆகியோர் பாராட்டினார்கள்.