சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் காலேஜ் வளாகத்தில், அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் - 2022
April 06, 2022
0
சென்னிமலை, ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலமாக நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்குபெற்ற தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டியினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான E.திருமகன் ஈவெரா MLA., அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் சேர்மேன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான டாக்டர் மக்கள் ஜி ராஜன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். பழனிச்சாமி, பேச்சுப் போட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜாகனி, குமாரவலசு ஊராட்சி தலைவர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.