ஒரே நாடு மின்னிதழ் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா, பண்டிட் தீனதயாள் விருது வழங்கும் விழா, மற்றும் ஒரே நாடு எழுத்தாளர்கள், புரவலர்கள் பாராட்டு விழா 26.04.2022 செவ்வாய்க்கிழமையன்று சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் உயர்திரு. கே.அண்ணாமலை அவர்கள் கலந்துகொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இந்த விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள், தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகளும், கட்சியின் அணி பிரிவு நிர்வாகிகளும், இணையப் பத்திரிகை நிர்வாகிகளும் மற்றும் அவர்களுடன் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவினை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் பிரிவு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.