தேசிய அளவிலான ஓபன் கராத்தே போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது.
April 26, 2022
0
தேசிய அளவிலான ஓபன் கராத்தே போட்டி ஹையாஷிகா ஷிட்டோரியு சார்பாக சென்சாய் ரமேஷ் அவர்கள் குமரன் திருமண மண்டபம் பூலுவபட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது.
இதில் கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல், சென்னை, கேரளா,
கர்நாடகா உட்பட 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
கோபி அகஸ்தியா தற்காப்புக்கலை பயிற்சி மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்டதில் கட்டா பிரிவில் முதலிடம் முகுந்த் மூன்றாமிடமும் பெற்றனர்.
சண்டை பிரிவில் தர்ஷன், ஹரிஹரசுதன், சஞ்சய், நேத்ரா முதல் பரிசையும் பெற்றனர்.
ஏனையோர் இரண்டு, மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
பரிசு பெற்றவர்களை பாராட்டி சென்சாய் ரமேஷ், சென்சாய் ரவி, சென்சாய் குணசேகரன்,
யோகாச்சாரி பிரேமலதா, செம்பை பெரியசாமி பரிசுகளை வழங்கினர்.
Tags