வேளாளர் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் 26.04.2022 இன்று நடைபெற்றது.
April 26, 2022
0
ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்
BME, ECE, EEE & Mech துறையின் சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
26.04.2022 இன்று இனிதே நடைபெற்றது. வேளாளர் கல்வி அறக்கட்டளையின்
செயலாளர் திரு.எஸ்.டிசந்திரசேகர் ஜயா அவர்கள் விழாவிற்கு தலைமை
உரையாற்றினார். அவர் தமது உரையில் பொறியியல் மாணவர்களால் இந்தியா மாபெரும்
பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார். வேளாளர் பொறியியல் மற்றும்
தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பாக்டர் எம்.ஜெயராமன் அவர்கள் விழாவில்
சிறப்புரையாற்றி தேசிய கருத்தரங்கின் நோக்கம் குறித்து மதிப்புமிக்க உரையை
நிகழ்த்தினார். மேலும் மின்னிலக்கத் தொழில்நுட்பப் பகுதியைப் பற்றி அறிந்து
கொள்ளவும், பல்துறைப் பணிகளில் பங்கேற்கவும் மாணவர்களை வலியுறுத்தினார்.
தேசிய கருத்தரங்கின் மூலம் மாணவர்கள் வெளி உலகில் நிகழும் நடப்புகளை
உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். கருத்தரங்கிற்கு
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரு. சத்தியமூர்த்தி சின்னசாமி துணைத்தலைவர்
செயல்பாடுகள், அக்வா சப் பொறியியல் கோயம்புத்தூர் அவர்கள் பொறியியல்
பரிணாம வளர்ச்சி மற்றும் இன்ஜினியரிங் நவீன போக்குகள் பற்றி எடுத்துரைத்தார்.
மற்றும் திரு. T. நரேந்திரன் துணைத்தலைவர் நிதி மற்றும் நிர்வாகம் அக்வா சப்
பொறியியல் கோயம்புத்தூர் அவர்கள் ஆராய்ச்சி மற்றும் நவீன உபகரணங்களின்
முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் 45க்கும்
மேற்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
Tags