நந்தா தொழில்நுட்ப கல்லூரி நூலகத்தின் சார்பில் “உலக புத்தகதின விழா”
April 26, 2022
0
நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் மத்திய நூலகமும் ஈரோடு பொதுநாலகத்
துறையின் மாவட்ட மையநூலகமும் இணைந்து “உலக புத்தக தின விழா”
நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியின் “அன்பு ஆசிரியா்”
விருது பெற்ற ஆசிரியா் திரு.இ.கலைக்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டார்.
நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ்.
ஆறுமுகம் அவாகள், மாவட்ட நூலக அலுவலர் திரு. வே. மாதேஸ்வரன் மற்றும்
கல்லாரியின் முதல்வர் முனைவர் ச.நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டு
வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் மத்திய
நூலகத்தின் நூலகர் முனைவர் டி.பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார்.
பின்னர் சிறப்பு விருந்தின் திரு.இ.கலைக்கோவன் சிறப்புரையாற்றுகையில்,
ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலம் ஏற்படும் பயன்கள் மற்றும் நன்மைகளை
பற்றியும், மாணவர்களுக்கு விரிவாகவும், நகைச்சுவை கலந்தும் எடுத்துரைத்தார்.
பின்னர், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு வகையான கேள்விகளுக்கும்,
சந்தேகங்களுக்கும் தக்க விடைகள் மூலம் பதிலளித்தார்.
நிகழ்வின் முடிவில் ஈரோடு மாவட்ட மைய நூலக முதல்நிலை நாலகர்
இரா.வேல்முருகன் நன்றியுரை கூறினார்.
இவ்விழாவினை சிறப்பாக செய்திருந்த ஈரோடு மாவட்ட மைய நூலகத்துறை
மற்றும் நந்தா தொழில்நுட்ப கல்லாரியின் நூலகர்களை ஸ்ரீ நந்தா கல்வி
அறக்கட்டளையின் செயலர் திரு. எஸ். நந்தகுமார் பிரதீப், மற்றும் நந்தா கல்வி
நிறுவனங்களின் செயலா திரு. எஸ்.திருமூத்தி, மற்றும் நந்தா தொழில் நுட்ப
வளாகத்தின் இயக்குனர் முனைவர் செந்தில் ஜெயவேல் ஆகியோர் பாராட்டி
தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.