ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்புகள் பெற்று பயனடைந்த பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
April 18, 2022
0
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (16.04.2022) அன்று சென்னை, அண்ணா சாலையிலுள்ள
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்புகள்
பெற்று பயனடைந்த விவசாய பெருமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் விழாநடைபெற்றது.
அதைத்தொடர்ந்து,
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள், ஈரோடு மாவட்டம்,
சித்தோடு ஸ்ரீ கோகுல கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை
வழங்கினார்.
உடன் ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்
அ.கணேசமூர்த்தி, துணை மேயர் வி.செல்வராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர்
நவமணி கந்தசாமி, மேற்பார்வை பொறியாளர் (ஈரோடு மின் பகிர்மான வட்டம்) கு.இந்திராணி,
செயற்பொறியாளர் (நகரியம்) சொ.ராமச்சந்திரன், ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.
Tags