கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு முழுவதும் இலவச மின் இணைப்பு பெற்ற அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளும் வகையில் காணொலி காட்சி மூலம் பார்வையிட ஏற்பாடு -
April 18, 2022
0
தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் 100000 வது விவசாய இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவானது தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பாக சென்னையில் நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களும், மேலும் பல மின் துறை அதிகாரிகளும், மற்றும் விவசாய பயனாளிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இலவச மின் இணைப்பு பெற்ற அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளும் வகையில் காணொலி காட்சி மூலம் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இத்திட்டத்தின் கீழ் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் வட்டார பகுதிகளில் உள்ள 850 விவசாயிகளுக்கு இயல்பு வரிசை, தட்கல் மற்றும் 50 ஆயிரம் சுய உதவித் திட்டம் மற்றும் விவசாய இலவச மின் இணைப்பு திட்டம் மூலம் பயனடைந்தனர். அதன்படி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ்ச்சிக்கு காணொளி மூலம் பங்கேற்க ஏற்பாடு செய்யபபட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மின்வாரிய மேற்பார்வையாளர் திரு. நேரு அவர்களும், கோட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், மற்றும் மின் வாரிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்ற அனைத்து விவசாய பெருமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Tags