தீரன் சின்னமலை 267-வது பிறந்த நாளை முன்னிட்டு, தீரன் சின்னமலை திருவுருவச்சிலைக்கு ஈரோடு கலெக்டர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
April 18, 2022
0
ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் 1756
ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி தீரன் சின்னமலை பிறந்தார். சுதந்திர போராட்ட வீரர்
தீரன் சின்னமலை அவர்களை கெளரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17-ம் நாளன்று பிறந்த நாள் விழா சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. மேலும் ஓடாநிலையில் ரூ.30.00 இலட்சம் மதிப்பில் தீரன்
சின்னமலை மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் தீரன்
சின்னமலை அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்
ஆடி 18 அன்று நினைவு நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது.
அதன்பேரில் நேற்று (17.04.2022) ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பேரூராட்சி,
ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் மாவட்ட செய்தி மக்கள்
தொடர்புத்துறையின் சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை 267-வது
அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு
மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வி.சசிமோகன், தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்
குறிஞ்சி.என்.சிவகுமார் ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை
அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
செலுத்தினார்கள்.
இவ்விழாவில் ஈரோடு துணை மேயர் வே.செல்வராஜ்,
மாவட்ட ஊராட்சித்தலைவர் நவமணிகந்தசாமி, உதவி காவல்
கண்காணிப்பாளர் கெளதம்கோயல், அரச்சலூர் பேரூராட்சி தலைவர்
விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார்,
மொடக்குறிச்சி வட்டாட்சியர் சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு
அலுவலர்கள் பாலாஜி (செய்தி), செ.கலைமாமணி (விளம்பரம்) மற்றும்
அரச்சலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன் உட்பட உள்ளாட்சி அமைப்பு
பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.