வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் திறப்பு விழா - மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் திறந்து வைத்தார்
April 21, 2022
0
அறம் அறக்கட்டளையின் முயற்சியால் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், வள்ளிபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 மூலம் பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு 19.04.2022 செவ்வாய்க்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி அவர்கள், ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் ஏரியா 7 சேர்மன் விஷ்ணு பிரபாகர் அவர்கள், அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர். ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 தலைவர் செல்வகுமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வக்குமார் அவர்கள் கலந்து கொண்டனர்.
வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நமது சட்டமன்ற உறுப்பினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறம் அறக்கட்டளை முயற்சியால் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 மேற்கண்ட பணிகளை ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் செய்து முடித்தது.
இந்நிகழ்ச்சியில் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலர் சுமித்ரா, வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமூர்த்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் புதூர் கலைமணி, சிவகிரி முன்னாள் பேரூராட்சித் தலைவர் பரமு (எ) ஆறுமுகம், பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் முருகானந்தம், வெல்லோட்டம்பரப்பு முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ். டி. செந்தில்குமார், மூத்த உறுப்பினர் பாலகுமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி, மண்டல தலைவர் கிளாம்பாடி சேகர், சதாசிவம், விஜயகுமார், ராமலிங்கம், யுவராஜ், வலசுமணி, குமாரசாமி, செந்தில்குமார், தணிகாசலம் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.