பா.ஜ.க வில் இணைந்த தி.மு.க கிளைச் செயலாளர் மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மூர்த்தி
April 21, 2022
0
மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், வள்ளிபுரம் ஊராட்சியின் திமுக கிளைச் செயலாளர் திரு.மூர்த்தி மற்றும் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. கவிதா மூர்த்தி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் புரிந்துகொண்டு திமுக கட்சியில் இருந்து விலகி நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் தன்னை பா.ஜ.க வில் இணைத்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் முருகானந்தம், கிழக்கு ஒன்றிய தலைவர் கிளாம்பாடி சேகர், முன்னாள் வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி தலைவர் எஸ். டி. செந்தில்குமார், மூத்த நிர்வாகி பாலகுமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி, கிளாம்பாடி கவுன்சிலர் ஜெகதாம்பாள், சவிதா, தணிகாச்சலம், காயர் செந்தில், சதாசிவம், விஜயகுமார், ராமலிங்கம், யுவராஜ், செந்தில்குமார், குமாரசாமி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.