ஈரோடு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் புதிய திரைப்பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
April 21, 2022
0
WAFI group , சஜீவ் மாதவன், சபரி பிலிம் production இணைந்து தயாரிக்கும் "சா" என பெயரிடப்பட்ட
புதிய திரைப்பட படப்பிடிப்பு ஈரோடு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் , கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் குஷி ஆச்சார் என்பவர் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் இணைந்து சப்ஜி மாதவன் என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் "சா" திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அருண்குமார்சாமி அறிமுகமாகிறார். "பளபளக்குற பப்பாளி" என்ற பாடலை இலங்கையை சேர்ந்த கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். இந்தப் பாடலை பாடகர் வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களான கரூர், கொடைக்கானல், ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.