அத்தாணி , அகஸ்தியா தற்காப்புக்கலை பயிற்சி சார்பாக கராத்தே வண்ணப் பட்டை மற்றும் கருப்பு பட்டைத் தேர்வு
April 15, 2022
0
அகஸ்தியா தற்காப்புக்கலை பயிற்சி சார்பாக அத்தாணி சஞ்சீவிராய பெருமாள் கோவில் மண்டபத்தில் கராத்தே வண்ணப் பட்டை மற்றும் கருப்பு பட்டைத் தேர்வு மார்ச் 27 ல் நடைபெற்றது.
இதில் கண்ணாங்காட்டுப்பாளையம்,நம்பியூர்,கரட்டுப்பாளையம், காசிபாளையம்,
அளுக்குளி, கணபதிபாளையம் சிங்கிரிபாளையம் ஆகிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 120 பேர் கலந்து கொண்டனர் .
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டையச் சான்றிதழ் மற்றும் வண்ணப்பட்டை கருப்பு பட்டைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகி திரு ஜெகதீஷ் ,திரு காந்தி த.ஆ, திரு வேலுச்சாமி தாளாளர் அகிலவித்யாலயா ,
ஜப்பான் ஷிட்டோரியு ஈரோடு தலைமை பயிற்சியாளர் செந்தில் கணேசு,கராத்தே நாவலன்,ரென்ஷி பெரியசாமி,சென்சாய் ஜெகன் , ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags