Type Here to Get Search Results !

ஈரோட்டில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து இன்று 15.04.2022 கடையடைப்பு

ஈரோட்டில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈஸ்வரன் கோயில் வீதியில் ஜவுளி சங்கத் தலைவர் கலைச்செல்வன் அவர்கள் தலைமையில் , ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் மற்றும் இணை சங்கங்கள் இணைந்து நடத்திய ஒருநாள் கடையடைப்பு இன்று 15.04.2022 நடைபெற்றது. பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் கடையடைப்பு நடைபெற்றது.
அதில் கடந்த சில மாதங்களாக பஞ்சு மற்றும் நூல் விலையானது வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டு வருவதாகவும், ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ஒரு இலட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், இதனால் நூல் விலையும் உயர்ந்து கொண்டே வருவதாகவும், இவ்வாறு உயர்ந்து வரும் காரணத்தால் ஒட்டுமொத்த ஐவுளித்துறையும் அதிக பாதிப்படைந்துள்ளதாகவும்,இதனால் ஜவுளி வியாபாரிகளான நாங்கள் எந்த ஒரு புதிய ஆர்டர்களும் எடுக்க முடியவில்லை எனவும், முன்னமே எடுத்த ஆர்டர்களும் விலை ஏற்றத்தின் காரணமாக அனுப்ப முடியவில்லை எனவும், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும், இவ்வளவு விலை ஏற்றத்தின் காரணமாக சிறிய முதலீட்டைக் கொண்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளார்கள் எனவும், இதே நிலைமை நீடித்தால் ஈரோட்டில் ஜவுளித் தொழில் மிகவும் பாதிப்படையும் எனவும் தெரிவித்தனர். மேலும் ஜவுளி நிறுவனங்கள் தமது உற்பத்தியை நிறுத்த வேண்டிய சுழ்நிலை ஏற்படும் எனவும், இதனால் இதனை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் எனவும், ஆகவே மத்திய அரசு அதிக வருவாயை ஈட்டித் தரக்கூடிய இந்த ஜவுளித் துறையைக் கவனத்தில் கொண்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் பஞ்சையும் கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் சிதம்பர சரவணன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர்கள் ஆனந்த் குமார் மற்றும் கிருஷ்ணகுமார், துணைச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.