Type Here to Get Search Results !

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ பேட்டி - மக்களுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து அந்த பணிகளை ஆற்றுகின்ற நல்ல வாய்ப்பு

மக்களுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து அந்த பணிகளை ஆற்றுகின்ற நல்ல வாய்ப்பு இந்த தமிழ் புத்தாண்டில் கிடைத்திருப்பதாக கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பூமி பூஜையிட்டு துவக்கி வைத்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ பேட்டியளித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், மொடச்சூர், கலிங்கியம், கோட்டுப்புள்ளம்பாளையம், அழுகுளி, உள்ளிட்ட ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளான கான்கிரீட் தளம் அமைத்தல், புதிய தார்சாலை, சிறு பாலம், ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தல், தடுப்புச்சுவர் அமைத்தல், மேல்நிலை தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார், வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க சென்ற செங்கோட்டையன் எம்.எல்.ஏ க்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வறவேற்பளித்தனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ செய்தியாளர்கள் சந்திப்பின்போது -
அதிமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 5 ஊராட்சிகளில் பூமி பூஜைகள் போடுவதற்கான பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது, உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இன்று தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் எனவும் தமிழ் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், அனைவரும் வாழ்க்கையில் மேலும் மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் மக்களுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து அந்த பணிகளை ஆற்றுகின்ற நல்ல வாய்ப்பு இந்த தமிழ் புத்தாண்டில் கிடைத்திருப்பதாக கூறினார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.