கோபிசெட்டிபாளையம் அருகே ஜே.கே.கே வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகளின் ஊரக வேளாண் அணுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திரு. A.பார்த்திபன் அவர்கள் பேசும் போது, தேனீக்கள் இல்லாவிட்டால், இவ்வுலகில் மனித இனம் இல்லை, தேனீ வளர்ப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும் எனவும் நாட்டில் மலைத்தேனீ, சிறு தேனீ, இந்தியத்தேனீ, ஐரோப்பா தேனீ ஆகிய 4 வகை உள்ளன எனவும் தேனீ வளர்க்கும் இடம் நல்ல வடிகால் வசதியுடன் திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்துக்கு அருகிலும், நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும் எனவும் தேனீக்கள் கூட்டுக்குடும்பமாக வாழும் குணம் கொண்டவை, தேனீ வளர்ப்பு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவு, கூடுதல் வளர்ப்புக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடலாம் எனவும் தேனீ வளர்ப்புக்கு குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனம் தேவை, தேனீ வளர்ப்பதால் தென்னந்தோப்புகளில் 30 சதவீதமும், காய்கறி பயிர்களில் 40 சதவீதமும் மகசூல் அதிகமாகிறது எனவும் கூறினார். ஒவ்வொரு பூவிலும் மதுரமும், மகரந்த தூளும் வேண்டும். இரண்டும் இருந்தால் மட்டுமே தேனீக்கள் வாழ முடியும். பப்பாளி, பனை மரத்திலும், பூசணி, பாகற்காய், சுரக்காய் போன்ற கொடி காய்கறி பயிர்களிலும் ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும். ஆண் பூவில் உள்ள மகரந்த தூளை எடுத்து கொண்டு, அந்த பெண் பூவில் உள் சூல் முடியில் வைக்க வேண்டும். இதை தேனீக்கள் சரியாக செய்கின்றன. அவ்வாறு செய்யும்போது விதை உருவாகி பூ நிலைத்து இருக்கும், உதிராது, கொட்டாது. காய்கறிகளும், பழங்களும் ருசியாக இருக்கும். இவ்வாறு அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் உதவுகிறது. இது நடந்தால் மட்டுமே விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும். மக்கா சோளம், சோளம், ஏலக்காய், கொய்யா, பப்பாளி, தக்காளி, கத்திரி, பாகற்காய், பூசணிக்காய், மாங்காய், பருத்தி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களில் தேனீக்கள் வளர்ப்பால் மகசூல் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கூடும். தேனீக்கள் வளர்ப்பால் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கலாம். தேனீக்கள் வளர்த்தால் அந்த பூச்சிகளை காப்பாற்ற இயல்பாக விவசாயிகள் பூச்சி மருந்து அடிப்பதை குறைப்பார்கள். இதனால் மண் வளமாகும். சுற்றுச்சூழல் மேம்படும். தேனீக்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் அவர் அதற்கான பெட்டிகளையும் தானே தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, கொம்புத்தேனீ மற்றும் மலைத்தேனீ உள்ளிட்ட தேனீக்கள் வளர்த்து வருகிறார். விவசாயம் செய்வதோடு மகரந்த விருத்தி செய்யும் தேனீ வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என திரு.பார்த்தீபன் கூறினார்.
மேலும் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக JKK கல்லூரி மாணவிகளால் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை JKK வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் M. நந்தினி, B. பவித்ரா, S. பிரியதர்ஷினி, M. ராஜலெட்சுமி, D. ரக்ஷ்னா, S. ரேணுகா, ரேவதி நம்பியார், S. ரூஃபியானா, K. சங்கவி, M. சந்தன லட்சுமி, S. ஷில்பா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.