சத்தியமங்கலம், ஒரு லட்சம் விதைப்பந்துகள் சேகரிக்கும் நிகழ்ச்சி
April 15, 2022
0
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செயல்பட்டு வரும் பண்ணாரி பகுதியில், பிசிடி தொண்டு நிறுவன அமைப்பு மூலம் ஒரு லட்சம் விதைப்பந்துகள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகஸ்திய தற்காப்பு கலை பயிற்சியினர் 15ஆயிரம் விதைகள் சேகரித்தனர்.
இதில் நம்பியூர் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கரட்டுப்பாளையம் பள்ளியில் உள்ள மாணவர்கள் 10,000 விதைகளை சேகரித்து விதைப்பந்துகள் உருவாக்கிக் கொடுத்தனர்.
விதைப்பந்துகள் உருவாக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை ஓம் தேசிய பசுமை இயக்கத்தின் நிறுவனர் பசுமை சித்தர் அவர்கள் வழங்கினார்.
இதில் விமல், லினிகாஸ்ரீ, வேலாயுதம், தீக்ஷித் ஆகிய மாணவர்கள் அதிகமான விதைப்பந்துகள் சேகரித்ததற்காக பாராட்டு பெற்றனர்.
Tags