கோபி, கரட்டடிபாளையம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புனித வெள்ளி பாதயாத்திரை
April 15, 2022
0
புனித வெள்ளியை தொடர்ந்து உலகமெல்லாம் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி பிரார்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து இன்று 15.04.2022 கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து பவனி தொடங்கி புனித அமல அன்னை மேல்நிலைப்பள்ளியில் அருகிலுள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயம் வரை புனித வெள்ளி பாதயாத்திரை நடைபெற்றது.
இந்த புனித வெள்ளி பாதயாத்திரையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்தனை செய்தனர்.
ஆலய பங்குத்தந்தையான அருட்தந்தை. ஆன்டனி லாரன்ஸ் அவர்கள் தலைமையில் கோபி பங்கு மக்கள், கரட்டடிபாளையம் பங்கு மக்கள், கொடுக்கலாம்பாளையம் பங்கு மக்கள், கோபிபாளையம் பங்கு மக்கள் மற்றும் வலியாம்பாளையம் பங்கு மக்கள் அனைவரும் இந்த கூட்டு பிரார்த்தனை பவனியில் கலந்து கொண்டனர்.
Tags